இந்தி நடிகைகக்கு தமிழ் கற்றுக்கொடுத்த நடிகர் விவேக் : உருக்கமான கடைசி வீடியோ!!

19 April 2021, 3:21 pm
Actor Vivek Last Video -Updatenews360
Quick Share

நடிகர் விவேக் மறைவு தமிழக மக்களால் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அவரது ரசிகர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அனைவரிடமும் நட்பாக பழகும் நடிகர் விவேக், சமூக அவலங்களை, மூட நம்பிக்கைகளை தனது நகைச்சுவையில் கருத்தாக வெளிக்கொண்டு வந்தவர்.

சுற்றுச்சூழலில் முக்கிய பங்காற்றிய இவரது சேவையை யாராலும் மறக்கமுடியாது மறுக்கவும் முடியாது. இவர் கடைசியாக லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருளுடன் படத்தில் நடித்து வந்தார். சமீபத்தல் அந்த படப்பிடிப்பின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்த நிலையில் பெயரிடப்படாத அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஊர்வசி ரவுத்தாலா என்பவர், நடிகர் விவேக்குடன் பணியாற்றியது குறித்து உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பில் நடிகை ஊர்வசி ரவுத்தாலாவுக்கு தமிழ் கற்றுத்தந்த காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

தனது முதல் படமே மிகப்பெரிய நடிகர் விவேக்குடன் பணியாற்றியது மறக்க முடியாது. அவருடைய இழப்பு மிகப்பெரிய இழப்பு என்றும், எனக்காக சிரமப்பட்டு தமிழ் கற்றுக்கொடுத்தது மறக்க முடியாதது என்றும், அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.

Views: - 68

0

0