ஜனங்களின் கலைஞன் நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம்!! உறவினர்கள் தகவல்!!

17 April 2021, 11:27 am
Vivek -Updatenews360
Quick Share

சென்னை : மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நடிகர் விவேக்கின் உடன் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்த நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 1987ல் வெளியான மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் முதன்முறையாக திரைப்பயணத்தை தொடங்கிய அவர் 2020ஆம் வெளியான தாராள பிரபு திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.

தனது நகைச்சுவையால் கருத்துக்களை கூறுவதால் ஜனங்களின் கலைஞன் என அழைக்கப்பட்ட விவேக், சமூக நலன் சீர்த்திருத்த கருத்ததுகளையும் பரப்பியதால் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக வேலை பணிகளில் ஆர்வம் காட்டினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காவ வைத்து செயல்பட்டு வந்தார். நடிகர் விவேக் மறைவை அறிந்த பொதுமக்கள், சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 43

0

0