என்னை சீரழித்துதான் அவங்க மகளை ஹீரோயின் ஆக்கினாரு… பிரபல நடிகையின் தந்தை மீது BIGG BOSS பிரபலம் பகீர் புகார்..!!

Author: Babu Lakshmanan
13 May 2022, 5:15 pm
Quick Share

கோலிவுட் ஆகட்டும், பாலிவுட் ஆகட்டும், அட அவ்வளவு ஏன் ஹாலிவுட்டில் கூட பாலியல் பலாத்கார புகார்கள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற் போல, நடிகைகளும் தங்களை படுக்கைக்கு அழைப்பது குறித்த பகீர் தகவலை தற்போது வெளியிடத் தொடங்கி விட்டனர்.

Why men rape? Book seeks to find out answers

படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே பட வாய்ப்புகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இயக்குநர்கள் அல்லது தயாரிப்பாளர்களின் கட்டளைக்கு ஒத்துக்கொள்பவர்கள் திரையில் வருவதும், ஒத்துக் கொள்ளாதவர்கள் படத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்படுவதும்தான் பெரும்பாலான நடிகைகள் எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்சனையாகும்.

நடிகைகளின் இந்த பாலியல் புகாரில் பிரபல இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுமே சந்தித்து வருகின்றனர்.

Pooja Mishra - Bio, Age, Net Worth, Height, Single, Nationality, Body  Measurement, Career

இந்த நிலையில், நடிகை நடிகை பூஜா மிஸ்ரா தற்போது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பாலிவுட் அரங்கையே அதிரச் செய்துள்ளது.

அதாவது, பிரபல நடிகையாக சோனாக்ஷி சின்கா, ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் கால்பதித்து, பின்னர் தபாங் படத்தின் மூலம் கதாநாயகியாக பாலிவுட்டில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சோனாக்ஷி சின்கா, தமிழில் 2014ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் நடித்து உள்ளார்.

இந்த நிலையில், சோனாக்ஷி தந்தை குறித்து நடிகை பூஜா மிஸ்ரா, நடிகரும் மற்றும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்கா மீதும் அவரது மனைவி மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

Pooja Mishra Accuses Senior Hero Of 'Sex Scandal' - Movie News

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- எனது தந்தையும், சத்ருகன் சின்காவும் நல்ல நண்பர்கள். பாலிவுட்டில் விபச்சாரம் செய்தால்தான் பிழைக்க முடியும் என்று கூறி எனது தந்தையை சத்ருகன் மனைவி மூளைச்சலவை செய்தார். இதனால், அவர் என்னை சினிமாத்துறைக்குள் நுழைய விடவில்லை. இப்படியே 17 ஆண்டுகள் வீணாகி விட்டது.

என் தந்தை ஓய்வு பெற்று விட்டு புனேவிற்கு சென்று விட்ட நிலையில், சத்ருகன் சின்காவும், அவரது மனைவியும் என்னை மும்பையில் தங்கும்படி நிர்ப்பந்தித்து விட்டனர். நடிகர் சத்ருகன் சின்கா எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். எனக்கு மயக்க மருந்து கொடுத்து, என்னை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். எனது கன்னித்தன்மையை விற்று, பேஷன் டிசைனராக இருந்த அவரது மகளை ஹீரோயினாக ஆக்கிவிட்டார்.

Pooja Mishra talks about her viral fight from the controversial Bigg boss 5  in 2022 | Bigg boss 5, Viral, Boss

தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பாலிவுட்டில் வளர்ந்து வரும் என் மீது சத்ருகன் சின்கா குடும்பத்தினர் பாலியல் மோசடி செய்து வருகின்றனர். எனக்கு சூனியம் வைத்து, வீட்டில் இருந்த என ஸ்பான்சர்களின் பட்டியலையும் 35 படங்களையும் திருடிவிட்டனர். சத்ருகன் சின்காவால் தான் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் பாலிவுட்டில் வெற்றிபெற முடியாமல் போனதற்கு காரணம் சத்ருகன் சின்காவைத் தவிர வேறு யாரும் கிடையாது, எனக் கூறினார்.

All You Need To Know About Pooja Mishra Who Made Serious Allegations  Against Veteran Actor Shatrughan Sinha

நடிகை பூஜா மிஸ்ராவின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து சத்ருகன் மற்றும் சோனாக்ஷி சின்கா தரப்பிலிருந்து இதுவரை பதில் ஏதும் அளிக்காதது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Views: - 465

0

0