உங்க முகத்திரை விரைவில் கிழிக்கப்படும்… பிரபல நடிகரை எச்சரித்த முன்னாள் காதலி.. அந்த நடிகரின் மற்றொரு காதலிக்கும் அலர்ட்…!!

Author: Babu Lakshmanan
1 April 2022, 1:41 pm
Quick Share

சினிமா திரையுலகில் பெரும்பாலும் படங்களில் நெருங்கி நடித்துப் பழகும் போது, அது காதலாக மாறி கரம் பிடிக்கும் கதைகள் அரங்கேறுவது வாடிக்கையான விஷயம். அப்படித்தான் நடிகர்கள் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா முதற்கொண்டு தற்போது ஆர்யா – சாய்ஷா ஆகியோர் வரை திருமணம் செய்து கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு ஒரு சில பெயர்களே குறிப்பிட்டிருக்கிறோம்.

Jyothika and Suriya don't remember who proposed first, couple celebrate 14  years of togetherness

அதேபோல, காதலித்து பிரிந்து செல்லும் கதைகளும் சினிமா துறையில் அதிகம் நிகழ்ந்ததுண்டு.

அப்படித்தான் பிரபல நடிகரை காதலித்து ஏமாந்து போனவர் பாலிவுட் நடிகை சோமி அலி. இதுவரையில் திருமணமே செய்து கொள்ளாத நடிகர்களில் ஒருவரான சல்மான்கானைத்தான் அவர் காதலித்து வந்தார். சல்மான் கான் ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.சுமார் 8 ஆண்டுகள் காதலர்களாக வலம் வந்த இவர்களின் காதலுக்கு யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

அதன்பின்னர், படங்களில் நடிப்பதை விட்டு விட்ட சோமி அலி, அமெரிக்காவில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழக்கு நடத்தும் சமூக செயல்பாட்டாளராக இருக்கிறார். அந்த வகையில், அமெரிக்காவில் ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டைன் பாலியல் ரீதியாக பல பெண்களைத் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.

Somy Ali reveals Salman Khan cheated on her, says she 'didn't learn a  single thing' from him | Bollywood - Hindustan Times

இந்த நிலையில், ஹார்வி வெயின்ஸ்டைனோடு, சல்மான் கானை மறைமுகமாக ஒப்பிட்டு சோமி அலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருப்பது பாலிவுட் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது :- பாலிவுட்டின் ஹார்வி வெயின்ஸ்டைன்! உங்கள் முகத்திரை வெளிப்படும். உங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருநாள் வெளியே வந்து உண்மைகளைப் பகிர்வார்கள். ஐஸ்வர்யாராய் பச்சன் போல,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Somy Ali Says She Will EXPOSE 'Harvey Weinstein Of Bollywood', Shares A  Silhouette Of Salman Khan And Tags Aishwarya Rai Bachchan
Somy Ali reveals how she supports herself financially after quitting  acting: 'My father was very wealthy...' | Bollywood - Hindustan Times

மேலும், அந்தப் பதிவில் ஐஸ்வர்யா ராயையும் டேக் செய்திருக்கிறார். சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் இருவரும் முன்னர் காதலில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 938

0

0