மேலாடை இல்லை… வெறும் நகைகளை வைத்து உடலை மறைத்த பிரபல பிக்பாஸ் நடிகை.. வைரலாகும் புகைப்படம்!!

Author: Babu Lakshmanan
17 August 2022, 10:09 pm
Quick Share

பிரபல நடிகை ஒருவர் மேலாடை அணியாமல் வெறும் நகைகளை மட்டும் அணிந்து, தனது உடலை மறைத்து போட்டோஷுட் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, பிரபல நடிகர், நடிகைகள் பொழுது போக்கிற்காகவோ அல்லது மார்க்கெட்டில் தங்களின் மவுசைக் கூட்டிக் கொள்வதற்காக போட்டோஷுட் நடத்துவது வாடிக்கையாகி விட்டது. அண்மையில், ஹாலிவுட் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் கொடுத்த புகழ்பெற்ற நிர்வாண ஃபோட்டோஷூட்டை நினைவுகூறும் விதமாக, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோஷுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒருபுறம் ரன்வீர் சிங்கின் துணிச்சலுக்கு பாராட்டுக்ள் கிடைத்தாலும், மறுபுறம், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதேசமயம், ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் உள்பட பலரும் ஆதரவாக நிர்வாண போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர்.

இதேபோல, நடிகை எரிகா பேக்கார்ட், நடிகை உர்ஃபி ஜாவித் ஆகியோர் மேலாடையின்றி புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் Holy wound என்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய மலையாளப் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஜானகி சுதீர், மேலாடையில்லாமல் வெறும் நகைகளை மட்டுமே அணிந்துக் கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Views: - 290

10

0