“மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டுப் போடுங்க” : கோவையில் பிரச்சாரம் செய்த நமீதா!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2021, 12:36 pm
Namitha Campatign -Updatenews360
Quick Share

கோவை : மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க என்றும் கோவையில் தாமரை மலரும், தமிழ் நாடு வளரும் என்றும் கூறி நடிகை நமீதா பா.ஜ.க.,வுக்கு வாக்கு சேகரித்தார்.

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று அவருக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார்.

கோவை காந்திபுரம் ராமர் கோவில் பகுதியில் பிரசசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போழுது நமீதா பேசியதாவது : கடந்த ஐந்து வருடங்களில் இந்த தொகுதி மக்கள் 18 ஆயிரம் பேருக்கு மோடியின் திட்டங்களை வானதி சீனிவாசன் கொண்டு சேர்த்துள்ளார். பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விக்கு வருடம் பத்தாயிரம் ரூபாய் வழங்கி உள்ளார். அது மட்டுமின்றி அனைத்து விழாக்களுக்கும் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி உள்ளார்.

தமிழ்நாடு கலாச்சாரமும் கடவுள் நம்பிக்கையும் உள்ள பூமி. அந்த நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு எப்படி ஓட்டு போடுவது. எனவே இங்கேயே பிறந்து உங்களுக்காக சேவை புரியும் வானதி சீனிவாசன் அக்காவிற்கு வாக்களியுங்கள்.

அப்பொழுதுதான் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும். மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க. கோவையில் தாமரை மலரும் தமிழ் நாடு வளரும் என்று தெரிவித்தார்.

பிரச்சாரத்திற்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து நமீதா நடனமும் ஆடினார்.

Views: - 83

0

0