தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபா எம்.பி.யாக பதவி வகித்திருந்தார். சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் அவர் சமீபத்தில் கன்னடத்தில் வெளியான சார்லி -777 என்ற படத்தைப் பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 6 ஆம் தேதி அந்த படம் நன்றாக இருப்பதாக தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனை அவரது ரசிகர்கள் உட்பட பலரும் வரவேற்ற நிலையில் ப்ரீத்தம்.பிரின்ஸ்.கே என்ற பெயர் கொண்ட நபர் ஒருவர் ரம்யா பற்றி ஆபாசமாக கருத்து வெளியிட்டிருந்தார். இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தன்னைப் பற்றி ஆபாசமாக கருத்து தெரிவித்த அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவர் முடிவு செய்தார்.
இதனையடுத்து, மர்மநபர் பற்றி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்ற நடிகை ரம்யா, மா்மநபர் மீது புகார் அளித்தார். அதில், தன்னை பற்றி இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட மர்மநபர் யார் என்று கண்டுபிடித்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதுடன், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.