ஆபாச மெசேஜ்: சைபர் க்ரைமில் சனம் ஷெட்டி புகார்…

3 July 2021, 9:05 pm
Quick Share

சென்னை: இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி நடிகை சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி. அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கூடுதலாக பிரபலமடைந்தார். சமூகவலைத் தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரை ஏராளமானோர் இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.ஆபாசக் குறுஞ்செய்திகள் வந்த வாட்ஸ்-ஆப் எண்ணையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தையும், இதர ஆதாரங்களையும் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் அந்த வாட்ஸ்-ஆப் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

Views: - 63

0

0