மாஸ் காட்டிய குந்தவை.. ‘ஆதித்த கரிகாலன்’ விக்ரம் தொடர்ந்து திரிஷா செய்த வேலை என்ன தெரியுமா..?

Author: Rajesh
14 September 2022, 10:31 am
ponniyinselvan_Trisha
Quick Share

தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், 60 ஆண்டுகால போராட்டத்துக்கு பின் தற்போது திரை வடிவம் கண்டுள்ளது. பிரம்மாண்டமாக எடுத்து முடிக்கப்பட்ட இந்த கனவு திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக பொன்னியின் செல்வன் ரிலீசாக உள்ளது.

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனரான மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில்நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அப்படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் பிரபலங்கள் சிலர், தங்களின் ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றி படத்திற்கு ஏற்ப புதிதாக அப்டேட் செய்துள்ளனர். அந்த வகையில், நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், தற்போது ட்விட்டரிலும் அதே பெயரை மாற்றி வைத்துள்ளார்.

இன்னொரு பக்கம், குந்தவை கதாபாத்திரத்தில் வரும் த்ரிஷாவும் அதே பெயரை தனது ட்விட்டரில் தற்போது அப்டேட் செய்துள்ளார். இது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 239

26

1