நடிகர் அஜித்தின் மாமனார், மாமியார் யார் தெரியுமா…? குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்!!

Author: Rajesh
1 August 2022, 4:15 pm
Quick Share

1993-ல் தமிழில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான அஜித்துக்கு முதல் படத்திலேயே தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்துவிடவில்லை. கூடவே இவருடைய தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்பதுபோன்ற விமர்சனங்களும் எழுந்தன. எனினும் தொடர்ந்து விடா முயற்சியுடன் போராடிய அஜித்துக்கு ஆசை, காதல் கோட்டைபோன்ற படங்கள் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

தொடர்ந்து காதல் மன்னன், வாலி, தீனா, சிட்டிசன் என அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்த அஜித், அதன்மூலம் எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் தமிழ் சினிமாவின் அடுத்த வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்தார்.ஒவ்வொரு முறை வீழும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து முன்பிருந்ததை விட பெரிய ஹிட் கொடுப்பது அஜித்தின் ஸ்டைல்.

இவர் நடிப்பில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் அஜித்.இப்படத்தின் First லுக் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நடிகர் அஜித் தற்போது தனது நண்பர்களுடன் நாடு முழுவதும் பைக் ரைட் சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்படும் அஜித்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இவர் , கடந்த 2000-ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். நடிகர் அஜித்தின் தாய், தந்தை இருவரையும் நாம் பார்த்திருப்போம்.இந்நிலையில், நடிகை ஷாலினியின் தாய், தந்தையும் நடிகர் அஜித்தின் மாமனார் மாமியாருமான பாபு மற்றும் அலிஸ் அவர்களின் புகைப்படங்கள் நமக்கு கிடைத்துள்ளது.

Views: - 282

1

0