இ-பதிவில் மீண்டும் சேர்க்கப்பட்டது திருமணம் பிரிவு: பொதுமக்களிடம் இருந்து அதிக அளவு கோரிக்கை வந்ததையடுத்து மீண்டும் சேர்ப்பு..!!

18 May 2021, 10:00 am
63 Years old Marriage - Updatenews360
Quick Share

சென்னை: பொதுமக்களிடம் இருந்து அதிக அளவு கோரிக்கை வந்ததையடுத்து இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பயணம் செய்வதற்கு இ பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்பட்டிருந்தது. உரிய ஆவணங்களுடன் திருமணத்திற்காக பயணிக்க விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்களிடம் அதிக அளவு கோரிக்கை வந்ததை அடுத்து மீண்டும் திருமண அனுமதி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. நேற்று இ-பதிவுக்கான இணையதளத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, இனி பொதுமக்கள மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.


மருத்துவம், இறப்பு, திருமணத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருமணம் பிரிவும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம் என காவல்துறை அறிவித்துள்ளது.

Views: - 112

1

0