தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணை சாலை பிரிவில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வீட்டின் முன்பாக நடைபெற்ற ‘திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த கூட்டம் மாலை 6.30க்கு தொடங்கியது. பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஒரு சில மக்களும் சாரல் மழை தொடங்கியதும் அவரவர்கள் வீட்டை நோக்கி நடையை கட்ட தொடங்கினர்
இதனால் பொதுக்கூட்ட மேடையை தவிர்த்து கீழே உள்ள ஆயிரம் நாற்காலிகளும் காலியாகி ஆட்களே இல்லா பொதுக்கூட்டமாக மாறியது.
இந்நிலையில் திமுக அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனை குறித்து அமைச்சர் பேசத் தொடங்கியதும் நின்றிருந்த ஒரு சில மக்களும் மழையின் காரணமாக தங்கள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்
பொதுமக்கள் யாரும் இல்லாத நிலையிலும் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் அமைச்சர் பெரியசாமி திமுகவின் சாதனைகளையும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பெருமைகளையும் நான் கூறாமல் செல்ல மாட்டேன் என்று உறுதியோடு ஸ்டாலினை பெருமைகளையும் மேடையில் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் உரையாற்றினார்.
மேலும் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வீட்டின் முன்பாக நடைபெற்ற இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஆட்கள் வராமல் இருப்பது திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது
மேலும் யாருமே இல்லாத கூட்டத்தில் மேடையில் நின்று யாரிடம் அமைச்சர் பேசுகிறார் என்று ஆண்டிபட்டி மக்கள் நகைத்துச் சென்றனர்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.