கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடியுங்கள் : தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுரை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2021, 5:46 pm
Chennai HC -Updatenews360
Quick Share

கொரோனா தடுப்பு விதிமுறை குறித்து வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குப்பதிவின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேடும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் நடவடிக்கைளில் போது கொரோனா தடுப்பு விதிமுடிறைகளை பின்பற்றுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பரப்புரையில் கொரோனா தடுப்பு விதிகள் பற்றி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வேட்பாளர்கள் பொறுப்பன் செயல்பட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Views: - 88

0

0