கோவை அரசு கலைக் கல்லூரியில் படையெடுத்த மாணவர்கள்.. இன்று முதல் மாணவர் சேர்க்கை ஆரம்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2021, 12:29 pm
Govt College -Updatenews360
Quick Share

கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், கோவை அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.

இதுகுறித்து கோவை அரசு கலைக்கல்லூரி முதல்வர் சித்ரா கூறுகையில், “இன்று முதல் அட்மிஷன் நடைபெறுகிறது. இன்று விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது.

நாளை முதல் பொதுவான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி நாளை
பி.காம் , பி.காம் ஐ.பி. பி.காம் சி.ஏ, பி.பி.ஏ உள்ளிட்ட 4 துறைகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்

நாளை மறு நாள் அறிவியல் பிரிவில் உள்ள 5 துறைகளுக்கும், கலைப்பிரிவில் 11 துறைகளில் 5 துறைகளுக்கும் அட்மிஷன் நடைபெறும். இதே போல் அடுத்தடுத்த நாட்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. 1:3 என்ற விகதத்தில் மாணவர்களை சேர்க்கைக்காக கல்லூரியில் 1433 சீட்டுகள் உள்ளன.

செப்டம்பர் முதல் கல்லூரி இணையதளத்தில் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 80% மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்தக் கல்லூரிக்கு ஒருவனா சிகிச்சை மைய மாக இருந்தாலும் குறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவது இல்லை அதனால் பயப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 271

0

0