அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவியேற்க வேண்டி கோவிலில் அதிமுகவினர் சிறப்பு தரிசனம்… சிறப்பு பூஜைகள் நடத்தியும் வேண்டுதல்..!!

Author: Babu Lakshmanan
23 June 2022, 9:46 am
Quick Share

வேலூர் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி படவேட்டு எல்லையம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் வளர்த்து அதிமுகவினர் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

அதிமுக தலைமைக்கு இரட்டை தலைமையை தவிர்த்து ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி குடியாத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீ படவேட்டு எல்லையம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டது. மேலும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், நகர மன்ற முன்னாள் தலைவர்க மாயா பாஸ்கர் மற்றும் அமுதா சிவப்பிரகாசம், தற்போதைய நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 442

0

0