பிரச்சாரத்துக்கு முன் மருதமலை முருகனை தரிசனம் செய்த அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் : சாதனைகளை விளக்கி தீவிர வாக்கு சேகரிப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2022, 7:25 pm
கோவை : 38வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் திருமதி.ஷர்மிளா சந்திரசேகர் மருதமலை முருகனை தரிசனம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றைய முன்தினம் நிறைவுபெற்றது.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் இறங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வருகின்றனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட 38 வது வார்டு உறுப்பினராக போட்டியிடும் டாக்டர் சர்மிளா சந்திரசேகர் அவர்கள் இன்று மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவங்கினார்.
மருதமலை அடிவாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகளை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் அன்பு (எ) செந்தில்பிரபு மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர் .
நேற்று 38வது வார்டுக்கு உட்பட்ட பொம்மனாம்பாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து தனக்கு ஆதரவு திரட்டினார். மேலும் , பொம்மனாம்பாளையம் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கு சென்ற அவர் தனக்கு ஆதரவு கோரியது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/Drsharmilachandrasekar