ஸ்ரீபெரும்புதூர் அதிமுக இளம் வேட்பாளர் பிரேம்குமார், டீக்கடையில் பொதுமக்களுக்கு டீயை போட்டு கொடுத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் போன்ற சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைந்த நாடாளுமன்றமாக இருக்கிறது. எதிர்வரும் ஶ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இளம் வேட்பாளராக மருத்துவர் பிரேம்குமார் அவர்களை செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் சுங்குவார்சத்திரம், ஶ்ரீபெரும்புதூர், படப்பை போன்ற பகுதிகளுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார். சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையில் அருகே உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நகர் பகுதியில் முக்கிய நகர் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட போது, டீ கடைக்கு சென்று பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்து, டீ மாஸ்டர் இடம் என்னை இரட்டை இல்லை சின்னத்தில் வாக்கு செலுத்தி, என்னை வெற்றி பெற செய்தால், உங்கள் வீடு பிள்ளை போல் ஓடோடி வந்து உங்களுக்கு சேவை செய்வேன், என்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின் ஶ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அதிமுகவினர் வெட்டி வெடித்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் பிரேம்குமார், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு அவர்கள் வெற்றி பெற்றவுடன் தொகுதிக்கு வந்ததில்லை. அவர் மது ஆலையை வைத்து நடத்தி பொதுமக்களை மது குடிக்க சொல்லி கொடுக்கிறார். ஆனால், மருத்துவரான நான் பொதுமக்களுக்கு மருந்து கொடுத்து காப்பாற்றுவேன்,” என என நகைச்சுவையுடன் தெரிவித்தார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.