அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு : பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!!

Author: Udayachandran
7 October 2020, 11:13 am
Admk Celebrations - updatenews360
Quick Share

திருச்சி : அதிமுக முதல்வர் வேட்பாளராக ”எடப்பாடி பழனிசாமி” அறிவிப்பு இன்று வெளியானதை தொடர்ந்து வெடி வெடித்து இனிப்புகள் வழங்கிய அதிமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் கடந்த 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் இறுதியில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து 7ம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே துணை முதலவர் பழனிச்சாமி தேனியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டு வந்தார். இதே போல சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

இருவருக்கும் இடையே மாறி மாறி சமரச முயற்சியில் அமைச்சர்கள் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து இன்று காலை சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கழக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாரான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனை தொடர்ந்து திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகம் முன்பு அதிமுக நிர்வாகிகள்
மலைக்கோட்டை ஐயப்பன், பூபதி, அன்பழகன், வளர்மதி, சுரேஷ்குப்தா மற்றும் வட்ட கழக நிர்வாகிகள்
தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கழக கொடியை ஏந்தி கோஷமிட்டு வெடி வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

இதே போல திருச்சியில் பல்வேறு இடங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கினர்.

Views: - 31

0

0