வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டையில் அதிமுக பூத் கமிட்டி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை மகளிர் குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர் இளம்பெண் பாசறை நிர்வாகிகளை கழகத்தில் இணைப்பது உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
இதில், முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமான உடனிருந்தனர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது :- ஓநாய்களின் கூட்டம் திமுக. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளித்த அரசு அதிமுக. சிறுபான்மை மக்களை ஏமாற்றி, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு திமுக. இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்த அரசு திமுக. போரின் போது கூட பதவி ஆசை பிடித்தவர்கள் திமுக.
சிறுபான்மை மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு அதிமுக பக்கம் அதிகமாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக. திமுக, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டு வரபட்டது.
தேர்தல் நேரம் வரும் போது மக்களை திசை திருப்பவே நீட் தேர்வு குறித்து திமுக கபட நாடகம் நடத்தி வருகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டது. சுதந்திர போராட்டத்திற்காக உழைத்த அதிகமானோர் தமிழகத்தில் தான் உள்ளனர். ஆட்சிக்கு வந்த நாள் முதற்கொண்டு பாஜகவின் கொத்தடிமையாக திமுக செயல்பட்டு வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெரும், எனக் கூறினார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.