எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு : லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பிறகு திடீர் ஆலோசனை
Author: kavin kumar10 August 2021, 10:39 pm
சென்னை : லஞ்ச ஒழிப்பு சோதனைக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி. வேலுமணி சந்தித்து பேசினார்.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான 35 இடங்களிலும், தமிழகம் முழுவதிலும் சேர்த்து மொத்தம் 52 இடங்களிலும் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடந்தது வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்சு ஒழிப்புத்துறையினர் சோதனை நடப்பதை அறிந்த தொண்டர்கள், அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால், அசம்பாவிதம் நிகழாமல் இருக்க போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
சுமார் 12 மணிநேரம் நடந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது. சோதனையின் முடிவில் பெட்டகச் சாவி மட்டுமே எடுத்துச் செல்வதாகவும், வேறு ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சான்றழித்து விட்டுச் சென்றுள்ளனர்.அதேவேளையில், சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏ எஸ்பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையும் நிறைவடைந்தது. விசாரணை முடிந்து வெளியே வந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை எம்எல்ஏ எஸ்பி வேலுமணி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, அவர் லஞ்ச ஒழிப்பு சோதனை தொடர்பாக விளக்கியதாக தெரிகிறது.
0
1