எடப்பாடியாரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி : கே.பி. முனுசாமி திட்டவட்டம்..!

Author: Babu
10 October 2020, 4:33 pm
Quick Share

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டுமே அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க முடியும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நாளுக்கு நாள் நெருங்கி வரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்வதிலும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில், பல்வேறு பேச்சுவார்த்தைகள் மற்றும் சமதான நடவடிக்கைகளுக்கு பிறகு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 7ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, அதிமுகவினர் உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டுமே அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க முடியும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். ஏற்றுக்கொள்ளாதவர்கள், தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும், எங்களின் கூட்டணியில் தொடர முடியாது. 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவின் அதிகாரத்தை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும், எனக் கூறினார்.

Views: - 42

0

0