பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக செயற்குழு : முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு!!

28 September 2020, 10:31 am
Admk Executive- updatenews360
Quick Share

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக செயற்குழு கூட்ம் தொடங்கியது.

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் கட்சியான அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் வெளிவர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக முதல்வர் வேட்பாளர் யார்? கட்சிக்கு ஒற்றைத் தலைமை? 11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுக் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கும் சூழ்நிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பங்கேற்றுள்ளனர். கூட்டம் தொடங்குவதற்கு முன் முதலமைச்சரை அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, நிலோபர் கபில் மற்றும் துரைக்கண்ணு ஆகியோர் சந்தித்து சென்றனர்.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இதே போல துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் எம்,ஆர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். இந்த நிலையில் செயற்குழு கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அவரது முகம் கொண்ட முகமூடியை அணிந்து, ஜெயலலிதா வாரிசே வருக என முழக்கங்களை எழுப்பினர்.

Views: - 8

0

0