மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ!

25 August 2020, 10:07 am
Admk Mla Corona - Updatenews360
Quick Share

புதுக்கோட்டை : கொரோனா காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை அதிமுக எம்.எல்.ஏ நார்த்தாமலை ஆறுமுகம் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்ப்டடார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. ஓரளவு தொற்று குறைந்து வந்தாலும் கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள், வியாபாரிகள், பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அன்று இரவே திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மீண்டும் அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Views: - 28

0

0