அந்த விஷயத்தில் திமுகவும், அதிமுகவும் ஒரே மாதிரி… திருமா பாச்சா பலிக்காது : அதிமுக எம்எல்ஏ விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2024, 6:09 pm

திருமாவளவன் வைத்த கோரிக்கை நிறைவேறாது.. அந்த விஷயத்தில் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் என அதிமுக எம்எல்ஏ கூறியுள்ளார்.

மதுரை ஒத்தக்கடையில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா கூறுகையில் “துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றதால் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடப்போகிறதா?, உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே முதலமைச்சர் அதிகாரத்துடன் செயல்பட்டு வந்தார்.

தற்போது அதிகாரபூர்வமாக துணை முதலமைச்சர் என அறிவிக்கப்பட்டு உள்ளது, தமிழகத்தில் திமுக, அதிமுக என இரண்டே கட்சிகள் இருந்தன.

தற்போது தமிழகத்தில் பல கட்சிகள் வந்துள்ளன, புதிதாக கட்சிகள் வந்ததால் சில வாக்குகள் சிதறியுள்ளன.

அதிமுகவின் 10 சதவீத வாக்குகள் குறையவில்லை, அதிமுக, திமுக தவிர பிற கட்சிகள் சிறிய கட்சிகள் தான், எங்களின் தோலில் ஏறி சவரி செய்யும் கட்சிகளாக தான் பார்க்கிறோம்.

எடப்பாடி பழனிச்சாமி ராஜதந்திரதோடு அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றியடையும். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இனி சோதனையுமில்லை, இடையூறுகளுமில்லை.

சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவது எனும் ஒரே நோக்கில் அதிமுக பணியை தொடங்கி உள்ளது.

திமுகவை பலமுறை வீழ்த்தியுள்ளோம், சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவது கடினமல்ல, அதிமுக ஒரு பீனிக்ஸ் பறவை தோல்விகளை கடந்து வெற்றியை ஈட்டும், திருமாவளவன் இந்தியாவில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்,

அவரின் கோரிக்கை நிறைவேறாது, அதிமுக ஆட்சிக்காலத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டன. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என நோக்கில் தான் அதிமுக உள்ளது என கூறினார்.

  • Jason Sanjay in Vidaamuyarchi Audio Launch விடாமுயற்சி ஆடியோ விழாவில் விஜய் மகன்? தயாரிப்பு நிறுவனம் அப்டேட்!
  • Views: - 289

    0

    0