இனி அதிமுக என்றாலே எடப்பாடியார் தான்… ஓபிஎஸ்-ஐ எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது : ராஜன் செல்லப்பா பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
25 April 2023, 4:59 pm
Quick Share

பாஜகவுடன் கூட்டணி தொடருவதற்கான காரணம் என்ன..? என்பது குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விளக்கமளித்துள்ளார்.

மதுரை காதக்கிணறு பகுதியில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் அமைப்புச் செயலாளருமான ராஜன் செல்லப்பா வழங்கினார்.

தொடர்ந்து ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- திருச்சியில் ஒபிஎஸ் நடத்தியது மாநாடு அல்ல. அது ஒரு சாதாரண பொதுக்கூட்டம். நாங்கள் எங்கள் தலைமை கழக பேச்சாளரை வைத்து நடத்தும் பொதுக்கூட்டம் நடத்துவது போல ஒபிஎஸ் கூட்டத்தை நடத்தி உள்ளார். ஒபிஎஸ் விரக்தியின் உச்சத்தில் உள்ளதே திருச்சி கூட்டத்தில் தெரிந்தது.

திமுகவை எதிர்க்க வேண்டும், திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிற அதிமுக தொண்டர்களின் மன எண்ணத்தின்படி ஒரு வரி கூட ஒபிஎஸ் திமுகவை பற்றி பேசவில்லை. அதிமுக என்றாலே எடப்பாடியாரை தான் இனி குறிக்கும். அதிமுக கொடியையோ, சின்னத்தையோ பயன்படுத்தினால் ஒபிஎஸ்க்கு தான் இனி அவமானம்.

ஒபிஎஸ் திமுக என்ற பெயரை ஓ.பன்னீர்செல்வம் வைத்துக்கொள்ளலாமே தவிர, இனி அதிமுக என்ற பெயரை ஓபிஎஸ் வைத்துக்கொள்ள முடியாது. ஒபிஎஸ்க்கு அதிமுகவிலோ, மக்கள் மனதிலோ இனி இடம் இல்லை. எம்ஜிஆர் போல ஈபிஎஸ்சை அழகு பார்ப்பதில் தவறில்லை. எம்ஜிஆரோடு தொண்டர்கள் ஒப்பிட்டால் தான் தவறு. எம்ஜிஆர் போல இருக்க வேண்டும் என தொண்டர்கள் எதிர்ப்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.

ஒபிஎஸ்க்கும், ஈபிஎஸ்க்கும் எம்ஜிஆர் வேடம் போட்டு பார்ப்போம். யார் எம்ஜிஆர் சாயலில் இருக்கிறார்கள் என்று பார்ப்போம். அதிமுகவுக்கு துரோகம் நினைப்பவர்கள், கேடு நினைப்பவர்களை எம்ஜிஆர் பழி வாங்குவார். அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர்களை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது.

காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உட்கட்டமைப்பு இல்லாததால், எங்களோடு போட்டி போட முடியவில்லை. தமிழகத்தில் உட்கட்டமைப்பு சிறப்பாக உள்ள இரண்டு கட்சிகளே தலைமையேற்க முடியும். ஒன்று அதிமுக மற்றொன்று திமுக. பாஜக கொள்கையை விரும்பவில்லை. ஆனால், பிஜேபி கூட்டணியை அதிமுக தொண்டர்கள் எதிர்க்கவில்லை. பாஜகவோடு கொள்கையால் அல்ல. தேர்தல் கூட்டணி கொண்டுள்ளோம்.

பாஜக கூட்டணியை அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்களா விரும்பவில்லையா என்பது அல்ல. அதிமுக தொண்டர்கள் யாரும் பாஜக கூட்டணியை எதிர்க்கவில்லை. பாஜகவோடு தேர்தல் கால கூட்டணியாக அதிமுக கூட்டணி வைத்துள்ளது.
டெல்லியில் நாளை அமித்ஷாவை, அதன்பின்பு நட்டாவை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். அதன்முடிவாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயார்படுத்த உள்ளோம். என்றார்.

Views: - 250

0

0