மக்கள் மீது அக்கறை இல்லை… வாக்குறுதிகள் பற்றி மலுப்பலான பதில்… திமுக குறித்து ஆர்பி உதயகுமார் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
28 June 2021, 2:47 pm
rb udhayakumar - updatenews360
Quick Share

மதுரை : -திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறிவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் மழுப்பலான காரணத்தை கூறவது மக்கள் மீது அக்கறை இல்லாததை காட்டுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது :- புரட்சித்தலைவி அம்மா 69 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு சமூக நீதியை காத்தது போல்‌, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 உள் ஒதுக்கீடு எடப்பாடியார் வழங்கினார். இதன் மூலம் கடந்த ஆண்டு 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைத்தது

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள், தற்போது நீட் தேர்வு உள்ளதா இருக்கிறதா என்பதை தற்போது வரை சொல்லவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறினார்கள். ஆனால், இன்றைக்கு மதுரை உட்பட 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனாவால் பொருளாதார சிக்கலால் வாழ்ந்து வரும் மக்களுக்கு மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தொழில் முனைவோர்களும் மிகவும் பொருளாதார சிக்கல்களுக்கு ஆளாகி உள்ளனர். இதனால், மக்கள் குமுறி போய் உள்ளனர். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அனைத்து பிரச்சினைகளையும் தீர்வு காண்போம் என்றும், நாங்கள் சொன்னதை செய்யக்கூடியவர்கள் என்று கூறிய ஸ்டாலின், தற்போது 50 நாட்கள் ஆகியும் பிரச்சனை தீரவில்லை.

தற்போது சாத்தியமில்லை என்று சொல்கிறார்கள். ஏன் தேர்தலுக்கு முன்பு சாத்தியமில்லை என்று கூறவில்லை. அதேபோல் நீட் தேர்வில் மலுப்பலான பதிலைக் கூறுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு இதை கூறவில்லை. இதன் மூலம் மக்கள் மீது அக்கறைஇல்லாதை காட்டு தான் காட்டுகிறது.

அதேபோல் மின்சாரத்துறையில் அனுபவம் வாய்ந்த சில பேர் அமைச்சராக பணியாற்றி உள்ளனர். ஆனால் யாரும் அணில் மீது பழி சுமத்தவில்லை‌. நாம் அனில் அம்பானியை பற்றி கேள்வி பட்டிருப்போம். ஆனால் மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டுக்கு அணில் தான் என்று கூறுகிறார். அவர் கூறியது மிகவும் விந்தையாக இருக்கிறது. கடந்த கால திமுக ஆட்சியில் கடுமையாக மின்வெட்டு இருந்தது. இதை அப்போது அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துள்ளார், எனக் கூறியுள்ளார்.

Views: - 263

0

0