நாகையில் எளிய மக்களுக்கான அம்மா மினி கிளீனிக் சூறையாடல் : எஸ்பி வேலுமணி கண்டனம்..!!

5 May 2021, 3:33 pm
sp velumani - updatenews360
Quick Share

கோவை : நாகை மாவட்டத்தில் அம்மா மினி கிளீனிக் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக எம்எல்ஏ எஸ்பி வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரு 92வது வார்டு அம்மா உணவகத்தை திமுகவினர் சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, மீண்டும் பெயர் பலகை பொருத்தப்பட்டது.

இந்த பிரச்சனை முடிந்து 24 மணி நேரம் ஆவதற்குள், நாகை மாவட்டம் அவரிக்காட்டில் செயல்பட்டு வந்த அம்மா கிளினிக்கும் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை கூட்டியுள்ளது. இந்த சம்பவத்திற்கு திமுகவினர் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா மினி கிளீனிக் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்பி வேலுமணி விடுத்துள்ள பதிவில், “கொரோனா பேரிடர் காலத்தில் எளிய மக்களுக்கும் சிறந்த மருத்துவம் உடனடியாக கிடைக்க வேண்டும் எனும் உன்னத நோக்கோடு துவங்கப்பட்ட அம்மா மினி கிளீனிக் நாகை மாவட்டம் அவரிக்காட்டில் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 193

0

0