“மக்கள் அதிகம் கூடும் இடத்தில் டாஸ்மாக் கடை வேண்டாம்”: கோவையில் அ.தி.மு.க.வினர் மனு!!

Author: Aarthi Sivakumar
28 August 2021, 3:43 pm
Quick Share

கோவை: பொதுமக்கள் பிரதானமாக பயன்படுத்தும் சாலையில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் என்று கூறி அ.தி.மு.க.வினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை வெள்ளலூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த பேரூராட்சியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருவதாகவும் கோவைக்கு செல்வதற்கு மிகவும் பிரதான சாலையான சக்தி விநாயகர் கோயில் நகர் பகுதியில் டாஸ்மாக் கடையை நேற்று முதல் திறந்து விற்பனையை தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்தனர்.

தற்போது திறந்திருக்கும் டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருவதாகவும், விநாயகர் கோயில் இருப்பதால் பொதுமக்களுக்கும் சாலையை கடக்க இருக்கும் நபர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அந்த பகுதியில் கடை வராமலிருக்க மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

மேலும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால் பொதுமக்களுடன் சேர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

Views: - 291

0

0