கோவை ; யார் கூட்டணிக்கு வந்தாலும் கூட்டணியோடு, இல்லையேல் மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் என கோவையில் அம்மா பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
இந்த நிலையில், வருகின்ற 24ஆம் தேதி ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடாளுமன்றத் தேர்தலை சுட்டிக்காட்டியும், கூட்டணியை குறிப்பிட்டும் அம்மா பேரவை கோவை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில் 76வது பிறந்தநாள் காணும் புரட்சித்தலைவியை (ஜெயலலிதா) வணங்குகிறோம் எனவும், “தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார், எத்தனை கூட்டணியோடு யார் வந்தாலும், எங்களோடு யார் கூட்டணி வந்தாலும், கூட்டணியோடு இல்லையேல் மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார், நாளையும் நமதே! நாற்பதும் நமதே!,” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, மற்றும் அம்மா பேரவை கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
பிரபல பத்திரிகையாளர் கூறிய கருத்துக்கள் கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக அவன், இவன் என ஒருமையில் இயக்குநரை சரமாரியாக விமர்சித்துள்ளார்.…
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் சினிமாவை…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு என்ற அறிவிப்பை நாடே உற்று நோக்கியது. கடந்த 2019ஆம் ஆண்டு…
நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். பின்னர் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார்.…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு என்ற அறிவிப்பை நாடே உற்று நோக்கியது. கடந்த 2019ஆம் ஆண்டு…
This website uses cookies.