கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி.. : நமது அம்மா நாளிதழில் கடும் விமர்சனம்!!

16 November 2020, 10:14 am
Vel Yatra ADMK - Updatenews360
Quick Share

தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையையும் ஒறுமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். மதத்தின் பெயரால் வாக்கு வங்கி அரசியல் ஏற்க முடியாது என நமது அம்மா நாளிதழில் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் வெகு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜக சார்பாக வேல்யாத்திரை மேற்கொள்ள இருந்த நிலையில் ,அதிமுக தடை விதித்தது. மேலும் சட்டம் ஓழுங்கு, கொரோனா போன்ற காரணங்களை முன்வைத்தது.

இந்த நிலையில் வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உண்டாக்கும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்திருந்தார். அவருடைய விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக நாளேடான நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

ஹெச்.ராஜா, வருந்துவதைவிட திருந்துவதே ரொம்ப முக்கியம்! நமது அம்மா நாளிதழில்  கண்டனம்!

அதில் சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுப்படுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை யாத்திரைகளை தமிழகம் ஆமோதிக்காது, ஆதரிக்காது என்பதை உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதத்தை நெறிப்படுத்தவே மதங்கள், வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்துக்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தமிழக மக்கள் தொடர்ந்து நிரூபத்திருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதத்தின் பெயரால் வாக்குவங்கி அரசியல் ஏற்க முடியாது: வேல் யாத்திரை விவகாரத்தில் அ.தி.மு.க நாளேடு கடும் விமர்சனம்

மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக அனுமதிக்காது என்றும், இதனை வேல் யாத்திரை செல்ல விழைபர்வள் உணர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்கக வேண்டும் அது கருப்பர் கூட்டமானாலும் காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 26

0

0