காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 14 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி அலுவலகம் பரபரப்பு நிலவி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது. மாநகராட்சியில் 32 திமுக, விசிக 2, சுயேச்சைகள் 3 என 37 உறுப்பினர்களும், அதிமுக 8, தமிழ் மாநில காங்கிரஸ் 1, பிஜேபி 1, பாமக 2, சுயேச்சைகள் 1 என மொத்தம் 14 எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். நிர்வாக பணிக்காக மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, பாதாள சாக்கடை ,குப்பைகளை கையாளுவது உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு எந்தவித மேம்பாட்டு பணிகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும், கடந்த இரண்டு மாதங்களாக மாமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டமும் முறையாக நடைபெறவில்லை.
அதுமட்டுமல்லாமல், திமுக கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அவர்களின் ஒரு தலைபட்சமான நிர்வாகத்தை கண்டித்தும், எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் செந்தில்குமார் இடம் மனு அளித்தனர்.
எதிர்க்கட்சியை சேர்ந்த 14 வார்டுகளிலும் இதனால்வரையில் எந்த அடிப்படை பணிகளும் செய்யாமல் வார்டுகளை புறக்கணித்து மக்கள் மத்தியில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு அவப்பெயரை வாங்கித் தர திமுகவும், மாமன்ற ஊழியர்களும் முயற்சிப்பதாக அதிமுக மாமன்ற உறுப்பினர் சிந்தன் குற்றம் சுமத்துகிறார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகள்
1.பழைய கட்டிடத்தை இடிப்பதற்கு ரூ.25.50 லட்சம் என ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரே வாரத்தில் அதை மற்றொருவருக்கு மாற்றி 25.60 லட்சம் ரூபாய் என அனுமதி வழங்கப்பட்டிருப்பதை காணும்போது, யாரோ தனிநபர் ஒருவர் லாபம் சம்பாதிக்க மாநகராட்சி துணை செல்வதாக தெரிகிறது.
5.மாநகராட்சி பொறியாளர் கணேசன் பெருமளவில் முறைகேடு செய்து வருகின்றார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.