மதுபோதையில் மலை மீது சாகசம் : உயரிழக்கும் அபாயம்
10 September 2020, 2:39 pmமதுரை : மது போதையில் மதுரை திருப்பரங்குன்றம் மலையிலிருந்து இளைஞர்கள் ஆபத்தான முறையில் தண்ணீர் சறுக்கு விளையாட்டு விளையாடி வருவதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை 300 மீட்டர் உயரம் கொண்டது. மழை காலங்களில் இம்மலை மீது சிறிய அருவி போல மழை நீர் கொட்டுவது வழக்கம். இந்த நேரங்களில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் 10 க்கும் மேற்பட்டவர்கள் மலை மீது இருந்து வழியும் மழை நீரில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் சறுக்கு விளையாட்டை விளையாடி வருகின்றனர்.
இதற்கு முன்னர் இது போல ஆபத்தான விளையாட்டினால் சிலர் உயிரிழந்து உள்ளதால் இப்பகுதிக்கு இளைஞர்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு வருவதையும் பொறுப்படுத்தாமல் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். மேலும் இப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
0
0