விமான நிலையத்தில் யுவன் சங்கர் ராஜாவின் காரை பூட்டிய ஏரோ ஹப் அதிகாரிகள் : பரபரப்பு!!
சென்னை விமான நிலையம் வந்த பவதாரிணியின் உடல் திநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திநகரில் உள்ல இளையராஜாவின் இல்லத்திற்கு இயக்குநர்கள் வெங்கட் பிரபு, சுதா கொங்குரா, நடிகர் பிரேம் ஜி, பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் வந்திருந்தனர். பவதாரிணியின் இறுதி சடங்கிற்காக அவருடைய உடல் இரவு 10 மணி அளவில் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் இலங்கையிலிருந்து தனது சகோதரியின் உடலை கொண்டு வர சென்றிருந்த யுவன் சங்கர் ராஜா சென்னை விமான நிலையம் வந்தார். அவர் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல அவருடைய கார் தயார் நிலையில் இருந்தது. அப்போது அவருடைய ஓட்டுநர் காரை எடுக்க முயன்ற போது முடியவில்லை. பிறகு பார்த்தால் அவருடைய காரின் டயர் லாக் செய்யப்பட்டிருந்தது.
அது போல் பவதாரிணியின் உடலை பெற வந்த வெங்கட் பிரபுவின் காரும் லாக் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக விஐபி பார்க்கிங்கில் வர அதற்கென பாஸ் வாங்க வேண்டும். ஒரு வேளை துக்க நிகழ்வால் அவசரத்தில் இவர்கள் பாஸ் வாங்காமல் விஐபி பார்க்கிங்கில் காரை நிறுத்தியிருந்தனரா என தெரியவில்லை. இதையடுத்து யுவன் சங்கர் ராஜா தனது சூழலை எடுத்துச் சொன்னதும் அந்த பூட்டு நீக்கப்பட்டது. அது போல் வெங்கட் பிரபுவின் கார் பூட்டும் நீக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கான உண்மையான காரணம் என்னவென தெரியவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.