தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டங்கள் தோறும் மருத்துவ முகாம்கள் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் படி விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலத்தில் காய்ச்சல் மருத்துவ முகாமினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு இன்று தொடங்கி வைத்து மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி ஆட்சியர் மோகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்வைன் ப்ளு காய்ச்சலால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காய்ச்சலுக்கு தேவையான மாத்திரை மருந்து இருப்புகள், தேவையான அளவு உள்ளதாகவும், காய்ச்சலுக்கென்று தனி வார்டு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் இரண்டு நாட்கள் மாணவர்களுக்கு விடுப்பு எடுத்துகொண்டு மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென வலியுறுத்துவதாக கூறினார்.
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
This website uses cookies.