மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள திமுக மாநில பொதுக்குழு கூட்டத்தில் கழக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று சிறப்பிக்க வருகை தருவதையொட்டி சிறப்பான வரவேற்பு கொடுப்பது, விழாவை எழுச்சியுடன் சிறப்பாக நடத்துவது, கழக ஆக்கப் பணிகள் குறித்த மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
மதுரை வடக்கு மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்மு.மணிமாறன் , வெங்கடேசன் எம்எல்ஏ,அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது எனக்கு தெளிவாக நம்பிக்கை வருகிறது எல்லோரும் விரும்பும் ஒரு சம்பவம் இதுவரைக்கும் எங்கேயும் நடக்காத அளவிற்கு இந்த பொதுக்குழு அமையும் என்று நான் நம்புகிறேன் பொதுக்குழு பலர் கூறியது போல் சென்னைக்கு தவிர வேறு இடங்களில் நடத்துவது சாதாரண காரியம் இல்லை.
அந்த அளவுக்கு கழக தலைவரும் துணை முதல்வரும் இங்கே மதுரையில் நடத்தலாம் என்று நம்பிக்கையோடு முடிவெடுத்தார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் அண்ணன் மூர்த்தியுடைய செயல்பாடாக தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன் .
ஒரு காலத்தில் கூட்டம் என்றால் அண்ணன் நேருவை சொல்வார்கள்.தற்போது அந்த பெயரை மூர்த்தியும் பெற்றுள்ளார். எனவே இன்னும் தேர்தலுக்கு 10 மாதங்கள் தான் இருக்கிறது எனக்கு நம்பிக்கை இருக்கு இந்த ரோட்ஷோ பல தொகுதிகளில் பல மாவட்டங்களில் நடைபெற உள்ளது என்றதனால் அனைவருடைய ஒத்துழைப்பும் மிக முக்கியம் என்று கூறினார்.
அமைச்சர் மூர்த்தி பேச்சு போது, நடைபெற உள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு அந்தஸ்து இருக்கிறவர்கள் கலந்து கொள்ள முடியும் தமிழ்நாட்டு முழுவதும் இருக்கக்கூடிய நம்முடைய அமைச்சர் பெருமக்கள் மாவட்ட கழகத்தினுடைய செயலாளர்கள் உள்ளிட்டோர் மட்டுமே அனுபவிப்பார்கள்.
இந்த பொதுக்குழு என்பது மிகச் சிறப்பாக நடக்கும் அவர்கள் வரலாற்றிலேயே இனிமேல் ரோடுஷோ மதுரை பார்த்து தான் மத்த ஊர்ல நட க்கும். அதுதான் கூட்டம் நிகழ்ச்சி என்பது எப்போதுமே மிகப் பிரமாண்டமாக நடத்தி இருக்கிறோம் கடைசியாக கூட ஒரே நாள்ல கூட டங்க்ஸ்டன் வெற்றி விழாவை முதலமைச்சர் தலைமையில் நடத்திக் காண்பித்தோம் திருப்புமுனை மாநாடு இந்த மாநாடு சிறக்குமோ இன்னொன்று இந்த நாடு பூரா பேசிக்கிட்டு இருக்க போது அன்றைக்கு வரக்கூடிய தேர்தலுக்கு மதுரை தான் திருப்பமுனை மாநாடு ஒத்தக்கடையில் திண்டுக்கல் அம்மாளும் சேர்ந்து நடத்தினால் அப்ப தமிழ்நாடு திரும்பி பார்க்கிற அளவுக்குத்தான் அந்த கூட்டம் மிகப்பெரிய கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். பல பெருமைகளுக்கு சொந்தம் மதுரை அரசியலுக்கு தலைநகரம் மதுரையில் இருந்தா சொல்லுவாங்க அதுல எந்த மாற்றமும் இல்லை.
தலைநகரம் இன்றைக்கு கட்சிக்கு ஆக்கபூர்வமான பணியலுக்கு நாம் மதுரை அதைப்போல நிர்வாக ரீதியாக தலைமை இடம் சென்னையாக இருந்தாலும் அந்த விழிப்புணர்வு பதிலாக இருக்கும் என்று பல நம்முடைய மூத்த முன்னோடிகள் மிகப்பெரிய மாநாடாக நம்முடைய திருப்பரங்குன்றத்தில் நடந்திருக்கு.
அது பழனியில் நடந்திருக்கு அது மாதிரி கூடல் நகர் பல்வேறு மாநாடுகள் எல்லாம் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் முன்னோர்கள் அதைவிட ஒரு படி மேலாக இன்றைக்கு பொதுக்குழு என்பது பணி 70 80 சதவீதம் நடந்து முடிந்திருக்கிறது.
நிச்சயமாக நாம் செய்த ஒரு வார காலத்திற்குள்ளாக எல்லோரும் திரும்பி பார்க்கிற அளவிலே பொதுக்குழு ஏற்பாடுகளை எல்லாம் தேர்வு செய்ய இருக்கிறோம் என்ற மாற்றமும் இல்லை .
ஆனால் 31ஆம் தேதி தலைவர் வருகிறார் பெருங்குடியில் இருந்து வந்து அவனியாபுரத்தில் ஆரம்பித்து அவனியாபுரத்தில் வந்து நம்முடைய வில்லாபுரம் ஜெய்ஹிந்த்புரம் பழங்காநத்தம் குரு தியேட்டர் திருமலை நாயக்கர் சிலையை வழியாக திரும்பி இந்த இயக்கத்திற்காக அரும்பாடு பட்டு இந்த இயக்கத்தை வளர்த்தவர்களில் முதன்முதலில் இருக்கக்கூடிய முதல் மேயராக இருக்கக்கூடிய மரியாதைக்குரிய நம்முடைய மேயர் முத்து அவர்களுக்கு அந்த சிலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்துவிட உள்ளார்கள்.
அந்த திறந்து வைக்கக்கூடிய நிகழ்ச்சி இந்த இயக்கத்திற்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பெருமையாக நாமெல்லாம் கருதுகிறோம் ஏனென்று சொன்னால் அவருடைய செயல்பாடு அவருடைய எல்லா அவர் பெயரைக் கேட்டாலே மதுரை அதிரும்.
அவரும் இந்த பகுதியில் இந்த இயக்கத்தை வளர்த்தற்கு ஒரு ஆலமரமாக இருந்த அவருடைய புகழுக்காக அவருடைய நினைவாக இன்றைக்கு இந்த பொதுக்குழுவுக்கு வருகிற போது மேயர் முத்து அவர்கள் சிலையை திறப்பது இந்த மேலும் நம்முடைய மதுரைக்கு சிறப்பு சேர்த்திருக்கிறது என்பதை தான் பெருமையாக கருதுகிறேன்
மதுரை மாவட்ட மட்டுமல்ல தமிழ்நாடு பிரதிபலிக்கும் ஒவ்வொரு மாவட்டத்தில் போட்டி போட்டு நிகழ்ச்சி நடத்தி இருந்தால் கூட இன்றைக்கு முக்கியமான பெரிய ரோடு சோ என்பது மிகப் பெரிய வெற்றிகரமாக அமைய வேண்டும் அதற்கு மூன்று மாவட்ட கழகங்களும் இணைந்து உழைத்திட வேண்டும் என பேசினார்
ரவி மோகன்-ஆர்த்தி பிரிவு ரவி மோகன்-ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து செய்வதாக அறிவித்ததில் இருந்து ஊடகங்களில் எங்கு திரும்பினாலும் ரவி மோகன்…
பல்லாவரம் பம்மல் அருகே, மாதம் ₹3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, பம்மல் 5-வது வார்டு திமுக வட்ட செயலாளர்…
புரொமோஷனில் தீவிரம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரின் நடிப்பில்…
காதலே தனிப்பெரும்துணையே 2018 ஆம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உணர்வுப்பூர்வமான காதல் காட்சிகள் தழும்ப…
டாஸ்மாக் முறைகேடு டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் திமுகவுக்கு நெருக்கமான பல பெரும்புள்ளிகளுடன் ஆகாஷ் பாஸ்கரனின் பெயரும் சிக்கியது. அதன்படி…
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழி உண்டு. இது சினிமாத்துறைக்கு மிக பொருத்தம் என்றே சொல்லலாம். காரணம் வாய்ப்பு…
This website uses cookies.