அங்கோடா லொக்கா விவகாரம் : புழல் சிறைக்கு மாறப்பட்டார் அமானி தான்ஞி.!
7 August 2020, 11:38 amகோவை: இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மரண வழக்கில் கைது செய்யப்பட்ட அமானி தான்ஞி சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த கடத்தல் மன்னன் அங்கோட லொக்கா மரணம் தொடர்பாக போலி ஆவணங்களை தயார்படுத்திய வழக்கில் கொழும்புவை சேர்ந்த அமானி தான்ஞி என்பவரும், மதுரையைச் சேர்ந்த சிவகாமசுந்தரி என்பவருடன் ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதில் அங்கோட லொக்கா மரணம் தொடர்பாக கைதான இலங்கையை சேர்ந்த அமானி தான்ஞிக்கு கரு கலைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சிகிச்சை முடிந்த அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாலும் இது போன்ற மற்ற நாடுகளை சேர்ந்தவர்களை சிறைவைக்க தனிப்பிரிவு புழலில் உள்ளதால் சென்னைக்கு மாற்றப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.