நாளை முதல் முழு ஊரடங்கு: அக்னி தீர்த்த கடலில் நீராட பக்தர்களுக்கு தடை…!!

9 May 2021, 12:23 pm
Quick Share

ராமேசுவரம்: நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக நாளை முதல் 24ம் தேதி வரை 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடவும், கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்யவும் நாளை முதல் தடை அமலுக்கு வருகிறது.

கடந்த மாதம் 20ம் தேதி முதல் அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை இருந்துவரும் நிலையில், அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட எந்த தடையும் விதிக்கப்படவில்லை. தற்போது முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் ராமேசுவரம் கடலில் புனித நீராட யாருக்கும் அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 120

0

0