‘பணி‘களை செய்ய விடாமல் தடுத்த ‘பனி‘ : கடும் பனிப்பொழிவால் விவசாயம் பாதிப்பு!!

5 November 2020, 1:12 pm
Mist - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் இன்று கடும் பனிப்பொழிவு நிலவுவதால் விவசாய பணிகள் பாதிப்படைந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன இங்கு வசிக்கும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் இப்பகுதியில் வழக்கத்தைவிட அதிகமாக குளிர் வாட்டி வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே நள்ளிரவு முதல் பனிப்பொழிவின் தாக்கம் காலை 10 மணி வரை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளதால் விவசாயப்பணிகள் பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இன்று காலை கடம்பூர் மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியதால் விவசாயம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் காலை 10 மணிக்கு பிறகே மக்கள் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 17

0

0