தமிழகத்தில் விவசாய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒதுக்கியுள்ள சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி தமிழக தலைவர் ஜி.கே. நாகராஜ் கூறியுள்ளார்.
பாஜக விவசாய அணி கன்னியாகுமரி கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடியில் நடைபெற்ற விவசாயிகள் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வகையில் அனைவருக்கும் இயற்கை விவசாய உரங்கள் மற்றும் இடுபொருட்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பேசியதாவது :- தமிழகத்தில் திமுக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு மூடை ஒன்றுக்கு 2100 ரூபாய் வழங்குகின்ற நிலையிலும், தமிழக அரசு நெல் கொள்முதலில் ஊழல் செய்கிறது. கடந்த ஆண்டு 9 லட்சம் டன் நெல் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. அவிநாசி அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல விவசாய திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தாமல் உள்ளது.
பாஜக விவசாய அணி மூலமாக விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை களைய முழு முயற்சி மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரி செய்வதற்கான நடவடிக்கை தீவிர படுத்தப்படுகிறது. திமுக அரசு கடந்த தேர்தலின் போது கரும்புக்கு குறைந்தபட்ச விலை 4000 ரூபாய் வழங்குவோம் என்று கூறிய திமுக அரசு இதுவரை அதனை நிறைவேற்ற வில்லை. இதன் காரணமாக 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கரும்புகள் வெட்டப்படாமல் அப்படியே கிடைக்கிறது.
மத்திய அரசு விவசாயிகளுக்காக வழங்கி வரும் திட்டங்களில் தமிழக அரசு பாரத பிரதமரின் படத்தை தவிர்த்து வருகிறது. அனைத்து நிறுவனங்களும் ஒரே பெயரில் பாரத் உரம் என்ற ஒரே பெயரில் உரத்தை விநியோகம் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது விரைவில் நடைமுறைக்கு வரும் போது உரம் தொடர்பான பிரச்சனைகள் களையப்படும்.மேலும் இயற்கை உரங்கள் தயாரிக்க மத்திய அரசு உடனடி அனுமதி வழங்கி வருகிறது.
வெளிமாநில நெல்லை கொள்முதல் செய்வதை தவிர்ப்பதற்காக சன்ன ரக நெல் உற்பத்தியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தின் விவசாய திட்டங்களுக்காக வழங்கிய தொகையில் 5990 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது.
உடன் விவசாய அணி மாநிலதுனைதலைவர் ஜெயக்குமார்,மாநில திட்ட பொறுப்பாளர் ஸ்ரீராம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.