“கண்டா வர சொல்லுங்க“ : அதிமுக வேட்பாளரின் வித்தியாசமான பிரச்சாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2021, 10:26 am
Karnan Song Admk -Updatenews360
Quick Share

திருப்பூர் : நடிகர் தனுஷின் கர்ணன் பட பாடல் மூலம் வித்தியாசமான முறையில் திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள், தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏ.வுமான விஜயகுமார், நடகர் தனுஷின் கர்ணன் பட பாடல் மூலமாக சமூக வலைதளங்களில் தனது படத்தினை சித்தரித்து சமூக வலைதளங்கள் வாயிலாக வித்தியாசமான முறையில் வாக்கு கேட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பாடலானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 83

0

0