சொந்த ஊர் திரும்பிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் : தொண்டர்கள், குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2021, 7:55 pm
OPS Warm Welcome -Updatenews360
Quick Share

தேனி : அதிமுக ஒருங்கிணைப்பாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டு சொந்த ஊர் திரும்பிய
ஓ.பன்னீர்செல்வத்திற்கு தேனி மாவட்ட அதிமுக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் போட்டியின்றி மீண்டும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இன்று சொந்த ஊருக்குத் திரும்பிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்க்கு தேனி மாவட்ட எல்லையில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்கொத்து, ஏலக்காய் மாலை, சால்வை மற்றும் எலுமிச்சம்பழம் உள்ளிட்டவற்றை கொடுத்து வரவேற்றதுடன் ஒருங்கிணைப்பாளராக நீண்ட வரிசையில் காத்திருந்து செய்யப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நீண்ட நேரம் காத்திருந்து அனைவரின் வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள்,பேரூர் கழக செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Views: - 184

0

0