எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம்: இயக்குநர் பாரதிராஜா வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த முன்னாள் முதலமைச்சர்..!

Author: Vignesh
29 September 2022, 4:30 pm
Quick Share

உடல்நல குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆன இயக்குனர் பாரதிராஜாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாரதிராஜா கடந்த மாதம் திடீரென உடல் நல குறைவு காரணமாக மதுவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இயக்குனர் பாரதிராஜாவுக்கு அஜீரண கோளாறு, நீர் சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் சளி போன்ற பிரச்சனைகள் உள்ளதாகவும், இதற்காக தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பாரதிராஜா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

சுமார் 15 நாட்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என, பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களையும், பிரார்த்தனையும் தெரிவித்து வந்தனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின், சென்னை நீலாங்கரைகள் அமைந்துள்ள தன்னுடைய வீட்டில் பாரதிராஜா ஓய்வெடுத்துவந்தார்.

பாரதிராஜா மருத்துவமனையில் இருந்த போது, போன் மூலம் நலம் விசாரித்த முதலமைச்சர் முக ஸ்டாலின், பின்னர் வீட்டிற்கே சென்று நலம் விசாரித்தார். இதை தொடர்ந்து ஓய்வில் இருந்த பாரதி ராஜாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன், மீண்டும் சிறுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று திரும்பிய இவரை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

Views: - 262

0

0