யாரையும் நம்பி அதிமுக இல்லை : பா.ம.க.வை மறைமுகமாக தாக்கிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!!

By: Udayachandran
15 September 2021, 6:46 pm
CV Shanmugam -Updatenews360
Quick Share

விழுப்புரம் : அதிமுக யாரை நம்பியும் இல்லை பாமகவுக்கு மறைமுகமாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தேர்தல் பொறுப்பாளரும் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இதில் மற்றொரு பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், அதிமுக யாரை நம்பியும் இல்லை,தொண்டர்களை நம்பி உள்ளது. யாரும் பயப்பட வேண்டாம் தைரியமாக தேர்தல் பணி ஆற்றுங்க வெற்றி பெறலாம் என்றார்.

மேலும் நாற்பத்தி ஒன்பது ஆண்டு கடந்து 50வது ஆண்டை நோக்கி செல்லும் கட்சி அதிமுக என்று பேசினார். அதிமுக கூட்டணியிலிருந்து பாமக தனித்து போட்டி என்று நேற்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் பாமகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மறைமுகமாகவே யாரை நம்பியும் அதிமுக இல்லை என்று பாமக பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார். இந்த பேச்சை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றனர்

Views: - 138

0

0