சசிகலா காரில் அதிமுக கொடி பறந்த விவகாரம் : சேலம் காவல் ஆணையரிடம் அதிமுகவினர் புகார்!!

2 February 2021, 2:16 pm
Sasikala Car - Updatenews360
Quick Share

சேலம் : சசிகலா காரில் அதிமுக கொடி வைத்திருந்தது தொடர்பாக சேலம் மாநகர ஆணையரிம் அதிமுகவினர் புகாரளித்தனர்.

சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்றைய முன்தினம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அப்போது அவர் சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் கண்டன் தெரிவித்திருந்தனர். ஆனால் டிடிவி தினகரன் அதிமுக கொடி பொருத்தப்பட்து தவறில்லை என்றும், அதிமுகவை மீட்க சட்டப் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் சசிகலா தனது காரில் அதிமுக கொடி பயன்படுத்தியது குறித்து சேலம் அதிமுக நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டவிரோதம் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Views: - 0

0

0