கோவையில் களைகட்டிய அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் : 1000 பேருக்கு அன்னதானம்!!
Author: Udayachandran RadhaKrishnan17 October 2021, 5:17 pm
கோவை : முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியின் வழிகாட்டுதலின் பேரில் கோவை வடவள்ளி பகுதியில் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.
கோவை வடவள்ளி 41A வார்டு செயலாளர் புதூர்.முருகேசன் தலைமையில் அதிமுக பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கழகக் கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
மேலும் இரு பெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதையடுத்து அனைவருக்கும் சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆரை போற்றும் விதமாகவும், ஏழை, எளிய மக்களுக்காக அம்மா உணவகம் தந்து சரித்திர சாதனை படைத்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவை போற்றும் விதமாகவும் 1000 பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் அன்பு (எ) செந்தில் பிரபு மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0
0