அதிமுக பொன்விழா கொண்டாட்டம் : பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய என்ஜினியர் சந்திரசேகர்..!

Author: Aarthi Sivakumar
17 October 2021, 12:05 pm
Quick Share

கோவை: அ.தி.மு.க.,வின் பொன்விழாவை முன்னிட்டு வடவள்ளியில் பொதுமக்களுக்கு புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர் அன்னதானம் வழங்கினார்.

அ.தி.மு.க.,வின் 50வது ஆண்டு பொன்விழாவை இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இவ்விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும், மாவட்டந்தோறும் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகங்களில் பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில்,கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என்ஜினியர் சந்திரசேகர் வடவள்ளி பேருந்து நிலையத்தில் இன்று கட்சி கொடியேற்றினார்.

மேலும், 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 271

0

0