அனைத்து தரப்பு மக்களுக்கான அரசு அதிமுக அரசு : மதுரையில் முதலமைச்சர் பெருமிதம்!!

31 January 2021, 8:26 pm
Madurai CM Speech - Updatenews360
Quick Share

மதுரை : அனைத்து தரப்பு மக்களுக்கான அரசாக அதிமுக அரசு விளங்குகிறது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் வாழ்வுரிமை மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதற்காக மதுரை வந்தார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் மதுரை ஒத்தக்கைட பகுதியில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் பேசியதாவது, வேளாண்மை செழிக்க தேவையான திட்டங்களை செயல்படுத்தி ருவவதாக கூறினார்.

குடிமராமத்து பணியால் ஒரு சொட்டு மழை நீர் கூட வீணாகாமல் தடுத்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், பெரும்பிடுகு முத்தரையரின் புகழுக்கு பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா என்றும், திருச்சியில் முழு உருவச்சிலையுடன் கூடிய முத்தரையர் மணி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதுள்ளாக தெரிவித்தார்.

சிறு குறு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை ஆளும அதிடுமுக அரசு செயல்படுத்தி வருவதவாக கூறிய அவர், அனைத்து தரப்பு மக்களுக்கான அரசாக அதிமுக அரசு விளங்குகிறது என்றும், விவசாயிகள் எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் நலத்திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றன என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Views: - 0

0

0