நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்… அடுத்தகட்ட செயல்பாட்டில் அதிமுக தீவிரம் : இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை!!

9 July 2021, 10:53 am
Admk - Updatenews360
Quick Share

சென்னை : உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 9-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல், சசிகலா விவகாரம் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Views: - 103

0

0