மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் : கோரிக்கை மனுவை அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2022, 11:42 am
SP Velumani Piyush - Updatenews360
Quick Share

கோவை : மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜவுளித் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

கோவை வந்துள்ளார் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் ஜவுளி தொழில் துறையினருடனான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கிறார்.

இந்நிலையில் கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் ஜவுளித்துறை கண்காட்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு வந்தார்.

அப்போது அவரை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜவுளித்துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் பருத்தி விலை உயர்வால் நூற்பாலைகளில் தொழிலாளர்கள், கைத்தறி நெசவு மற்றும் விசைத்தறிகள், பின்னலாடை நிறுவனங்கள் ஆகியவற்றில் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தொழில்துறை வளர்ச்சியில் ஆபத்து உள்ளது எனவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜவுளித் தொழிலில் வட இந்தியர்கள் அதிக அளவு பணிபுரிந்து வரும் நிலையில், அவர்கள் தங்குவதற்கு போராடுகிறார்கள் எனவும் ஆகவே வாடகை அடிப்படையில் தற்காலிக தங்குமிடம் அல்லது நிரந்தர குடியிருப்பு வழங்கினால் உதவியாக இருக்கும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் நலன் கருதி இ.எஸ்.ஐ மருத்துவமனை மூலம் மருத்துவ உதவி வழங்க நடவடிக்கை வேண்டும் எனவும் தற்போது என்டிசி தொழிற்சாலைகள் வியாபாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ள நிலையில் அந்த ஆலைகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பருத்தி உற்பத்தி தரமற்றதாக உள்ளது.

ஆகவே வேளாண்மை பல்கலை மூலம் விதை வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.ஜவுளி சந்தை தற்போது அகமதாபாத்தில் மட்டுமே உள்ள நிலையில் சோமனூர் அல்லது பல்லடம் அல்லது காரணம்பேட்டை பகுதியில் ஜவுளி சந்தை அமைத்துக் கொடுத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பருத்திக்கு எதிர்பார்க்கும் மானியம் வழங்கினால் அதிகப் பருத்தி உற்பத்தி செய்வார்கள் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு மானியம் வழங்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ள தோடு கோவை சத்தி சாலையில் உள்ள கணபதி எப்சிஐ சாலை மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் அதனை பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

ந்த சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Views: - 158

0

0