ஹெலிகாப்டரில் சென்ற அதிமுக பிரமுகர்! 2021ல் அதிமுக ஆட்சி அமைய ஸ்ரீவில்லிப்புத்தூர் பயணம்!!

23 September 2020, 11:45 am
Admk Executive Helicopter - updatenews360
Quick Share

கோவை : வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்ற சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் விஷ்ணு பிரபு சென்றார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியமைக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆளும் அ.தி.மு.க அரசு இக்கட்டான இந்த பேரிடர்காலத்திலும் களப்பணியாற்றி மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றுள்ளது.

மேலும், அடுத்த தேர்தலிலும் ஆட்சியமைக்க அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து களப்பணியாற்றி வருகின்றனர். அதன்படி, வரும் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் விஷ்ணு பிரபு, ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

இதற்காக கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தனது குடும்பத்துடன் புறப்பட்ட அவர் ஸ்ரீவில்லிப்புத்தூரில் சிறப்பு யாகம் மற்றும் பிரார்த்தனை நடத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கொரோனா காலத்திலும் நல்லாட்சி கொடுக்கும் அதிமுக அரசு, மீண்டும் ஆட்சியமைக்க சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறோம்” என்றார்.